வழிப்பாட்டு அதிசியங்கள்

நம் நாட்டில் வேறு எந்த ஸ்தலதிலும் நடைபெறாத அபிஷேக, அலங்கார, நிவேதனங்கள்.

மேற்படி இந்த ஸ்தலத்தில் இறையை முறையாக வழிபாடு செய்ததால் நடைபெற்ற அதிசயங்களில் ஒரு சில..


1)   ஜாதகத்தில் ஒரு பெண்ணிற்கு தகுதியற்ற கீழளான நட்பு ஏற்பட்டு ஓடிபோய் திருமணம் செய்து கொள்ளும் என்று இருந்து அவரின் பெற்றோர்களுடன் இச்சன்னத்திக்கு வந்து பெற்றோர்கள் கதறினார் அப்படி நடந்தால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கதறினார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறி அன்னை அருளியபடி ஜாதகப்படி முறையாக அன்னை உள்ளிட்ட தெய்வ வழிபாடு செய்ய சொன்னோம் வழிபட்டனர். தனது இனத்தில் மாப்பிளை அமைத்து, அன்னை ஸ்தலத்தில் நிச்சயிக்கப்பட்டு, அன்னையின் அருளோடு சிறப்பாக திருமணம் நடைபெற்றது. உடனே குழந்தை பாக்கியத்தையும் அன்னை வழிங்கினார்.

2)  ஒரு தம்பதிக்கு ஒரே ஒரு மகன் அவனுக்கு அப்போது 6 1/2 வயது அவன் ஏழு வயதை தொடும் போது தன் தந்தைக்கு ஈமக்காரியம் செய்வான் என ஜாதகத்தில் இருந்துள்ளது. இச்செய்தி தாய்கும் தந்தைக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எப்படி இருக்கும் கதறிவிட்டனர். அத்துடன் வேறு குழந்தை வாய்ப்பும் இல்லை என்றும் இருந்துள்ளது. இச்சூழலில் அந்த குடும்பத்தினர் நமது தாயின் பெருமை கேள்விப்பட்டு இச்சன்னதிக்கு வந்து தாயின் முன் கதறி அழுகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தி ஜாதகப்படி அன்னை அருளியபடி முறையாக வழிபாடு செய்து அன்னையிடம், என் தாலிபாக்கியம் காத்து தீர்க்க சுமங்கலியாக வாழுவும், தனக்கு அடுத்து குழந்தை என்றால் ஆசை. ஆகவே, தனக்கு பெண் குழந்தையும் வேண்டும் என்று கூறி ஒவ்வொரு பெளர்ணமியிலும் முறையாக வழிபாடு செய்ததால்... தாலி பாக்கியமும், குழந்தை பாக்கியம் அன்னை இவருக்கு வழங்கியுள்ளார் .முறையாக வழிபட்டு வந்தால் இப்போது அந்த பையானுக்கு 10 வயது, தந்தை நலமுடன் உள்ளார். பெளர்ணமி அன்றோ அழகான பெண்குழந்தை பெற்றனர்.மேற்படி இரண்டும் அம்மன் அருளினால் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

3)   ஒரு நாள் ஆறுமாத கர்ப்பிணி ஆன பெண் கோவிலுக்கு வந்து அம்மன் முன் நின்று கதறினார் . என்ன என்று விசாரணை செய்தேன். தனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தைக்காக தவம் இருந்து பின் கருவுற்று ஆறுமாத கர்ப்பிணியானேன் குழந்தை நலனுக்காக ஸ்கேன் பண்ணி பார்த்த போது கரு சிதைந்து சின்னபின்னமாகி விட்டது. ஆகவே கலைக்க வேண்டும் இல்லை எனில் என் உயிர்ருகே ஆபத்தாகிவிடும் என கூறுகின்றனர் என கதறி அழுதார். அவருக்கு, அம்மனிடம் வந்த பின் நீ கலங்காதே உன் ஜாதகப்படி ஒவ்வொரு வெள்ளியன்றும் வழிபாடு செய்! அம்மன் உன்னையும் உன் குழந்தைதையும் காப்பாள் என்று கூறி அம்மன் அருளிய வழிபாட்டு முறை யை கூறினேன் . அதன்படி வழிபாடு செய்து வந்தார் கடந்த 14.09.2012 வெள்ளி அன்று இத்திருகோவில் கும்பாவிஷேகம் 4ம் ஆண்டு விழாவிற்கு புறப்பட்ட அந்த பெண்ணுக்கு இடுப்பு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று அம்மன் அருளினால் இரண்டு மாத காலத்திலயே சிதைந்த கரு, ஆழகான பெண் குழந்தையாய் பிறந்தது. 10 மாதத்தில் பிறக்க வேண்டும் குழந்தையை, தன் அருளால் தான் இக்குழந்தை பிறந்தது என நிரூபிக்கும் வகையில் 8 மாத குறைமாதாமாக இருந்தாலும் பரவாயில்லை என தனது கும்பாபிஷேக நாளான 14.09.2012 அன்றுவெள்ளிக்கிழுமையே, பிறக்க வைத்து இனி இக்குழந்தை ஒவ்வொரு பிறந்த நாளும் என் கும்பாபிஷேக நாளாகும் என கூறி, தன் பக்தை வேண்டுதலை நிறைவேற்றி அவள் மகிழ்ச்சியடைவதை பார்த்து ரசித்த தாய் நம் அரசுகாலனி ஸ்ரீ மஹா புற்றுக்கண் மாரியம்மன் தாய்.

4)   ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு பணியாற்றி கொண்டு இருந்த ஒருவர் குழந்தைகள் எதிர்காலம் பற்றி ஜாதகப்படி வழிபட வேண்டினார். அம்மன் அருளிய வழிபாடுகள் சொல்லிக் கொடுத்தேன் அதன்படி வழிபாடு நடத்திவந்தார். சிறிது காலம் ஆன உடன் இருந்த வேலை போய் விட்டது என்று கண்ணீர் விட்டு அம்மனிடம் கதறினார். அவருக்கு ஆறுதல் கூறி வழிபாட்டை நிறுத்தாதீர்கள் தொடர்ந்து செய்யுகள் காரணமில்லாமல் உங்கள் வேலை போய் இருக்காது ஏதாவது பெரிய வாய்ப்புக்காக கூட அம்மன் இந்த பணியை தடை செய்து இருக்கும் என்று கூரினேன்.அதன்படி வழிபாடு தொடர்ந்து செய்து வந்தார் அதே போல் சம்பளத்திற்கு பணி செய்து அவருக்கு நேரடியாக அதே கம்பெனி ஏஜென்சி பெற்ற உரிமையாளர் ஆகி லட்சக்கணக்கில் வரவு செலவு செய்யும் அளவிற்கு அம்மன் அருளால் முதலாளி ஆகிவிட்டார்.

5)   திருமணம் ஆகி பத்தாண்டுகள் குழதந்தை இன்றி இருந்த தம்பதியருக்கு அன்னை அருளியபடி ஜாதகப்படி வழிபாடு செய்ய வைத்தேன். அதன்படி வார வாரம் செவ்வாய் அன்று இச்சன்னதி வந்து வழிபட்டனர். அன்னை அருளாள் இப்போது அழகான பெண் குழந்தையுடன் தொடாந்து வார வாரம் குடும்பத்துடன் வந்து தொடாந்து வழிபாடும் செய்து வருகின்றனர்.

6)   வார வாரம் செவ்வாய் அன்று AMN டி.வி.யில் இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை ஜாதகப்படி இறை முறை வழிபாடு நேரலையிலும், இப்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணமும், மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை ஒரே நாளில் நவகிரக ஓன்பது ஸ்தலங்களுக்கு அழைத்து செல்லுதல். இப்படி அம்மனின் பண்முகங்களில் அருள்பாலித்து வரும் அம்மன் ஜாதகப்படி முறையாக வழிபட்டு பயன்பெற வேண்டுகிறோம்.

7)   கடந்த ஆண்டு(2013) புதிதாக எம்.எஸ்.கே. மெடிக்கல் சிஸ்டம் உரிமையாளர் திரு.பி.மாரிமுத்து & குடுபத்தினர் சார்பில் அம்மனுக்கு 4 ½ அடி கேது பகவான் வாகனம் (ஐந்து தலை நாகம்) உபயமாக வழங்கினார். அவ்வாகனம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்யப்பட்டு 18.04.2013 அன்று திருச்சி நாகநாதர் (சிவபெருமாள் ) ஸ்தலத்திற்கும், பேரருள் மிக்க சமயபுரம் மாரியம்மன் ஸ்தலத்திற்கும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்தலத்திற்கும் சென்று முறையாக சிவன், விஷ்ணு, சக்தி ஆகிய தெய்வங்களை வணங்கிவிட்டு மேற்படி கேது பகவான் வாகனத்தை பூஜை போட்டு எடுத்துக் கொண்டு திருச்சி குடமுருட்டி ஆற்றுப்பாலம் தாண்டியாதும் கார் டிரைவருக்கு கருப்பண்ண காத்தவராயன் அருள் வந்து (50,60 கி.மீ வேகத்தில் கார் வந்து கொண்டு இருக்கையில்) கார் ஸ்டேரிங்கை விட்டு விட்டு குதிக்கின்றார். அங்கு இருந்து நமது அரசுகாலனி ஸ்ரீமஹாபுற்றுக்கண் மாரியம்மன் ஸ்தலம் வரும் வரை சுமார் 70 கி.மீ. தூரம் மற்றும் 1 ½ மணி நேர பயணம் அருளோடு தான் காரை ஒட்டி வந்தார். சாலையில் உள்ள வேகத்தடையில் மிக மெதுவாக ஏறி இறங்கி வந்தது, எந்த கீர் மாற்றம் கிடையாது,இடது ,வலம் கார் திரும்பிய போது இண்டிகேட்டர் போடாது வந்தது. காரில் இருந்த பெண்கள் அம்மன் அருள்ளோடு ஆடி கல, கல எனறு சிரிப்பொழி எழுப்பி மிக சந்தோஷத்துடன் வந்து கொண்டு இருக்கின்றேன் என்று கூறியபடி வந்தனர். இடையில் எங்கும் கார் நிற்கவில்லை. கார் டிரைவரின் டீ சாப்பிடலாமா? என்று கேட்ட போது மிகப்பெரிய முறைப்புதான் பதில் இவ்வாறு அம்மனும் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமியும் உடன் வந்து கேது பகவான் வாகனத்தை கொண்டு வந்து சேர்த்த அதிசயம்.