அரசுகாலனி ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் ஸ்தல வரலாறு
அரசுகாலனி ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் ஸ்தல வரலாறு
கடந்த பல ஆண்டிற்கு முன்பு சுயம்பு வடிவில் தானாக உருவானது தான் இந்த
புற்றுக்கண் மாரியம்மன். இத்திருக்கோவிலில் உள்ள புற்றுக்கண்ணில் அக்காலத்தில்
கரூர் ஈஸ்வரன் கோவிலில் வசித்த சித்தர்கள் இவ்வழியாக வாங்கல்
காவிரியாற்றில் நீராடி விட்டு இவ்வழியாக வந்தபோது அன்னை இவர்களுக்கு
இந்த புற்றுக்கண்ணில்தான் நேரடியாக காட்சியளித்து அருல்பாளித்துள்ளார்.
கடந்த 1987ல் இதற்க்கு திருவிழா நடத்த முடிவெடுத்த பொது அன்னை அருளோடு ஒரு
அம்மா! நீதான்! என் திருவிழாவை எடுத்து நடத்த வேண்டும் என்று அருளோடு
கூறியது. அதன்படி இவ்அன்னை திருவிழாவை எத்த்னை இடையூறுகளுக்கிடையிலும் அன்னை அருளோடும் உண்மையான பக்தி
உள்ள நல் பொதுமக்களின் ஒத்துழைப்போடும் தொடர்ந்து கடந்த 2014 வருடத்துடன் 27ஆண்டுகளாக தலைமை ஏற்று நடத்தி வருகின்றேன்.
இரண்டாம் ஆண்டு திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொது அம்மன் அருளில் நீ என்னை நம்பாமல் இருக்கிறாய். ஆனால் என் விருப்பப்படி திருவிழாவை நடத்தி வருகின்றாய் என்று கூறியது. நான் மட்டுமல்ல இந்த ஊரில் நிறைய பேர் அரை நம்பிக்கையில் தான் உள்ளனர் அனைவரும் நம்பும்படி செய் என்று கூறினேன். அதற்க்கு அம்மன் இத்திருவிழா முடிவதற்குள் இந்த புற்றிலிருந்து சர்பமாக வெளிவந்து காட்சியளிக்கின்றேன் என்று சத்தியம் செய்தது, அதன்படியே சித்த்ரவள்ளி நாடகம் ஆரம்பமாகும் முன்பு மல்லிகைப்பூ வேண்டும் என்று நாடக நடிகர்கள் கேட்டதற்காக அதை எடுக்க கோவிலுக்குள் வந்தபோது அம்மன் கூறியது போல புற்றிலிருந்து சர்பம் காட்சியளித்தது. அதைக்கண்ட நான் உடனே மைக்கை பிடித்து சர்பம் காட்சியளித்ததை கூறியவுடன் ஊர்போதுமக்கள் அனைவரும் திரண்டுவந்து பார்த்தனர். சர்பமும் புற்றிலிருந்து ஒரு கண்ணிற்குள் சென்று மறு கண்ணிற்கு வந்ததும் இப்படி மாறி மாறி சர்பமாக அன்னை அனைவருக்கும் காட்சியளித்தாள்.
மூன்றாம் ஆண்டு அரசுகாலனியில் வசிக்கும் சென்னியப்பன் - சாந்தி தம்பதியரின் கைக்குழந்தை இந்த கோவிலில் வேண்டி பிறந்த நாகலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கரூரில் அனைத்து மருத்துவர்களால் கைவிரித்த நிலையில் அரசுகாலனி ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் முன்பு படுக்க வைத்து எனக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, உன்னிடம் வேண்டி உன் அருள் மூலம் பெற்ற குழந்தையை காப்பாற்று தாயே என்று கதறினார்கள். இறக்க குணம் படைத்த கருணையுள்ளம் கொண்ட அன்னை விறைத்துக் கிடந்த அந்த குழந்தையை உயிர்பெரச்செய்தார். அப்போதே அன்னையின் அருள் பற்றி துண்டு பிரசுரம் அடித்து சென்னியப்பன் தம்பதியினர் வெளியிட்டு மகிழ்தனர்.
என் கனவில் வந்து எனக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறினாள். அதன்படி பொதுமக்களிடம் வசூல் செய்து செலத்திலுருந்து சிலை வடித்து வைத்தோம். ஐந்தாம் வருடம் திருவிழா சமயத்தில் ஊருக்குள் பெரியகாரியம் ஆகிவிட்டது. அப்போது கோவிலுக்கு எதிரேயுள்ள ராஜேந்திரன் குடிசை வீட்டில் உள்ள நெசவு மக்க கொட்டகை நடு வீட்டில் கோதுமை நாகம் பெரியது மடிபோட்டு படுத்துவிட்டது. அதைக்கண்ட பொதுமக்கள் அந்த வீட்டின் கீற்று மற்றும் மக்கத்தையும் வீட்டுக்காரர் உதவியுடன் பிரிந்தனர், அதை படம் எடுத்து ஏற்றுக்கொண்டுபிறகு அப்படியே படுத்திருந்தது. அப்போது ஒரு அம்மாவிற்கு அருள் வந்து யாரும் பயப்படவேண்டாம் நான் புற்றுக்கண் மாரியம்மன் வந்த்துள்ளேன். தீட்டுக்கழிந்தவுடன் சென்று விடுகிறேன் என்றும், இன்னும் சிறிது நேரத்தில் எனது அண்ணன் கருப்பணசாமி இங்கு வருவார் அவரைக்கண்டும் பயப்படவேண்டாம் என்று அருள்வாக்குஅருளிவிட்டு சென்றது. அருளில் கூறியது போல் சற்று நேரத்தில் திடிரென கருநாகம் அங்கு வந்தது. ஏராளமான பொதுமக்கள் கூட்டம் வந்து பார்த்துக்கொண்டே இருந்தனர் இரு நாகத்திர்க்கும் பால் வைத்தோம், குடித்தது. சூடம் ஏற்றி தீபாராதனை காட்டினோம். அதை ஏற்றுக்கொண்டு வண்ணம் படம் எடுத்து ஆடியது தீட்டுக்கழிந்தவுடன் இரண்டு நாகமும் மறைந்து விட்டது.
பிறகு ஊரைச்சுற்றி விளையாட, மஞ்சள் நீராட உற்சவர்சிலை அமைக்க என்கனவில் தோன்றி கூறியது. அதை ஒருவரிடம் கேட்க குறிப்பிட்டு கூறியது. அதன்படி நாங்கள் அந்த பெரியவரை அதற்க்கு முன் சந்தித்ததே இல்லை, இருப்பினும் அம்மன் குறிப்பிட்ட அந்த பெரியவரை சந்தித்து கனவில் அம்மன் கூறியதை கூறினோம். மறுபேச்சு பேசாமல் எவ்வளவு ஆனாலும் நான் வாங்கிக் கொடுக்கிறேன் என்று கூறினார். அதன்படி அந்த பெரியவரின் உதவிடன் கோவில் உற்சுவர் சிலை வாங்கப்பட்டது. அந்த பெரியவர்தான் வி.எஸ்.என்.சி.நரசிம்ம செட்டியார் & சன்ஸ், கரூர் அவர்கள்.
உற்சுவர் ஊரைச்சுற்றி தூக்குத்தேர் அமைக்க அன்னை என் கனவில் தோன்றி கூறியது. அதற்க்கு உரியவரையும் அடையாளம் காட்டியது. அதன்படி அவரைச் சந்தித்து கேட்டோம். அவரும் மறுபேச்சு பேசாமல் உடனே செய்ய ஒத்துக்கொண்டார். அதன்படி அந்த எஸ்.கே.சி.கேஸ் கம்பெனி உரிமையாளர் அவர்கள்.
விழா வருடா வருடம் சிறப்பாக அமைய செலவுகள் கட்டுக்கடங்காமல் போனது, இதனால் முன்னின்று நடத்தும் எனக்கும் கைப்படித்தம் ஏற்பட்டது. இந்த கவலையில் ஆழ்ந்திருந்தபொது சிறிய பெண் குமந்தைபோல் வந்து ஏன் கவலைப்படுகிறாய் ?ஒவ்வொருபொறுப்பையும் ஒவ்வொரு நபரிடம் கேட்டுப்பெற்றுக்கொள் நீ யாரை சந்திக்க சென்றாலும் உனக்கு முன் நான் இருந்து உரிய பொறுப்பை உரியவரிடம் ஒப்படைக்கின்றேன். நீ தொடர்ந்து கைப்பிடிப்பு ஏற்பட வண்ணம் சிறப்பாக திருவிழாவை நடத்து நான் இருக்கின்றேன் என்று கூறியது. அதன்படி மைக்செட், பந்தல், அன்னதானம், பிரசாதம், மேளம், நோட்டீஸ் இப்படி பல பொறுப்புகளை ஓவ்வொரு நபரும் தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து வருடாவருடம் செய்தும் வருகின்றனர்.
நான் காப்புக்கட்டி இத்திருவிழாவை ஆரம்பித்தால் திருவிழா முடியும் வரை மற்ற எந்த பணியையும் தொடமாட்டேன். தினசரி இரண்டு வேளை குளித்துவிட்டு விரதம் இருந்து இரவு நேரங்களில் விட்டிற்கு சென்று தங்காமல் கோவிலில் தங்கி மிகவும் நேம நிஷ்டையுடன் முழுமையான பக்தியுடன் ஒவ்வொரு வருட திருவிழாவையும் நடத்தி வருகிறேன்.தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டுடன் 27வருடங்களாக தலைமையேற்று இந்த தாயின் அருளோடு திருவிழாவை ஒவ்வொரு வருடமும் மிகச்சிறப்பாக மக்களின் நல் ஒத்துழைப்புடன் நடத்தி வருகின்றேன்.
இந்த தாயின் சக்தி பற்றி நிறைய கூறிக்கொண்டே போகலாம். கடைசியாக என் வாழ்க்கையில் கடந்த 17ம் ஆண்டின் திருவிழாவின் போதே இத்தாயின் திருவிழாவை பாதியில் நிறுத்தப்பட்டு என் மீதும் என்னைச் சேர்ந்தவர்கள் மீதும் கொலைப்பழி சுமத்தப்பட்டது. பொய் வழக்கு போட்டு விரதக்காப்புடன் கைது செய்யப்பட்டு இந்த அன்னை சன்னதில் இருந்து அழைத்துசென்று சிறையில் அடைக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண்ணிற்கு அருள்வந்து "என் குழந்தைகள் குற்றமற்றவர்கள், நான் அவர்களை நிரபாதிகள் என தீர்ப்பளித்து இச்சன்னதிக்கு ஊர்வலமாக அழைத்து வந்து சேர்த்தாள். (கோர்ட்டில் தீர்ப்பு நாள் அன்று நல்ல வெயில் அடித்தது எங்களை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர். ஆனால் யாரையும் நீதிமன்றத்திற்கும் அனுமதிக்கவில்லை. "நான், தாயே கடைசி நேரத்தில் கூட என் மக்களைப் பார்க்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்துகின்றார்கள், நீதான் அருள் புரிய வேண்டும்" என்று பிராத்தனை செய்தேன். அடுத்த சில நிமிடங்களில் கருமே கூட்டம் இப்பகுதியில் சூழ்ந்தது பட.. பட.. வென பெரும் மழை பெய்தது. துப்பாக்கி ஏந்திய காவல்துறை மழைக்கு ஓடியது, உடனே எங்கள் மக்கள் கோர்ட்டுக்குள் வந்துவிட்டனர் . இச்செயல் அனைவரையும் திகைக்க வைத்தது)
எங்கள் அம்மன் திருவிழா சாட்டியதும் நிச்சியமாக மழை பேயும் இது தொடர்ந்து நடந்து வருபவை. கடந்த 20ம் ஆண்டு அம்மனுக்கு ரூ.26,686/- செலவில் திருத்தேர் செய்யப்பட்டு அதில் அம்மன் மஞ்சள் நன்னிராட வீதி உலா வந்தாள் தொடர்ந்து இத்திருத்தேரில் வீதி உலா வரவிருக்கிறாள். இத்தேர் பழுதானதால் கடந்த 26ம் ஆண்டு இதை காந்திகிரமத்தை சேர்ந்த என்.லலிதா மற்றும் கே.புவனேஸ்வரி குடும்பத்தினர் செப்பனிட்டு வழங்கி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி கடைசி வாரம் முதல் காப்புக்காட்டுதல், கம்பம் நடுதல், பால்குடம், அக்னிசட்டி, அலகு, கரும்பால் தொட்டில் கட்டுதல், மொட்டையடித்து கரும்புள்ளி வெண்புள்ளி வைத்து உருவாரம் எடுத்தல், பூத்தட்டு, மாவிளக்கு, மஞ்சள் நீராட அம்மன் ஊருக்குள் தேர்பவனி வருதல், கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும், 2014ம் ஆண்டு 27ம் ஆண்டாக திருவிழா நடைபெற்றது.
கடந்த ம் ஆண்டு கோவில் கட்ட அம்மன் அருள் வழங்கியதன் பேரில் இதற்க்கான நிலம் கடந்த ஆண்டாக பாகபிரிவு காரணமாக உயிர்நீதிமன்றம் வரை வழக்கு நடந்து கொண்டு இருந்தது. இதுசம்பந்தப்பட்டவர்களிடம் கேட்ட பொது வழக்கு முடிந்ததும் தருகின்றோம் என்றனர். நான் சோர்ந்து வீட்டிற்கு வந்து படுத்தேன், அப்போது அம்மன் கனவில் வந்து கலங்காதே மகனே! ஒட்டுமொத்த நிலத்தை (1 1/2 ஏக்கர் ) கொடுங்கள் பணத்தை பிரித்துக்கொள்ளுகள் என கூறு என்பது. 1 1/2 ஏக்கர் நிலம் வாங்க என்னிடம் ஏது தாயே! பணம் என்றேன். நாளை காலை உன்னை ஒரு நபர் சந்தித்து இந்த இடத்தை வங்கிக் கொடு என்று கூறி மறைந்தாள். அன்னை அருளியபடி காலையில் அ.இ.அ.தி.மு,க.வைச் சேர்ந்த கரூர் மாவட்ட கழக துணை செயலாளர் திரு.ஆர்.காளியப்பன் அவர்கள் வந்து இந்த இடத்தை வங்கித் தாருங்கள் என்று கூறினார். அப்போது, வாங்கித்தருகின்றேன் கோவில் கட்ட எனக்கு இடம் தர வேண்டும் என்று கூறினேன், சரி என ஒப்புக்கொண்டார். அதன்படி நில உரிமையாளர்கள் மூவரிடமும் பேசி நிலம் 1 1/2 ஏக்கர் கிரையம் பெற்று, 30x41 அளவு புற்றை ஒட்டி உள்ள இடம் கோவிலுக்கு தானமாக எனது பெயரிலும், அதை அடுத்து வடக்கு பகுதியில் 30x41 அளவு காலி மனையை எனது எதிர்காலத்திகாக எனது பெயரில் கரையும் செய்து தந்தார். மேற்படி அ.இ.அ.தி.மு..வைச் சேர்ந்த திரு.ஆர்.காளியப்பன் (இப்போது கரூர் நகராட்சி துணைத்தலைவராகவும் உள்ளார்) அவர்களால் தானமாக வழங்கப்பட்ட 1230 சதுர அடியிலும், V.S.N.C. நரசிமம் செட்டியார் & சன்ஸ் அவர்கள் கோயிலை சுற்றி உள்ள சுமார் 1 ஏக்கர் நிலத்தையும் வாங்கி அதில் இவர்கள் 5x41ன்படி 205 சதுர அடிகள் தானமாகவும் ஆக மொத்தம் 1435 சதுர அடியில் கோவில் பணி துவங்கப்பட்டது. இக்கோயில் அமைய பெரும் நிதியாக ரூ.3,50,000 V.S.N.C & Sons சார்பில் வழங்கப்பட்டது. இந்த ஆரம்ப நிதியே! கோவில் அமைய அடித்தளமாக அமைந்தது. இந்நிதியை தொடக்க நிதியாக வைத்துத்தான் கடந்த 16.07.2006 கோவில் கட்ட பாளையம் செய்து 14.09.2008 அன்று இக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பணி நடைபெற்ற 2 1/4வருடம் (837 நாட்கள்) காவியுடை அணிந்து எந்தவித அசைவ உணவும் உண்ணாமலும், எந்தவித தீட்டுக் காரியங்களுக்கும் செல்லாமலும், ஒரே வீட்டில் மனைவியுடன் வாழ்ந்தாலும் சந்நியாசிபோல் வாழ்ந்து கடுமையான விரதம் இருந்து உண்மையான இறை அன்பர்களிடம் பொருளாகவும், நன்கொடைகளாகவும் பெற்றும், பட்ற்றக்குறைக்கு என் அசையும், அசையா சொத்துக்களை விற்றும், அடகு வைத்தும் மற்றும் பல வித்தங்களில் கடன் பெற்றும் அம்மனின் முழு அருளோடும் நல் இதயங்களின் உபயதாரரோடும் தனித்து நின்று இவ்வாலயத்தை முடிக்க வைத்தது அம்மன்.
இக்கோவிலை அம்மன் உத்தரவுப்படி கட்டிக்கொண்டு இருக்கும் போது முருகன் ஸ்தலம் அமைக்கும் பொது சிறிய குஞ்சாக முருகனின் வாகனம் மயில் வந்தது (2௦௦6). அதில் இருந்து இன்று வரை (2014) சுமார் 8 வயது மயில் தினசரி கோவிலுக்குள் வந்து அம்மன், முருகன் உள்ள தெய்வங்களுக்கு படைத்த பிரசாதத்தை எனது ( நிறுவனர் காலனி சேகர் சுவாமி) கையில் கொடுக்க, உண்ணும் அதிசியம்.
இக்கோவில் கும்பாபிஷேகம் தேதி த=நிச்சயக்பட்டது இமயமலை உச்சியில் உள்ள சிவபெருமான் ஸ்தலமான உத்திரகாசியில் உள்ள ரிஷிமகாத்மாவால்.
இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டு இமயமலை சென்று கங்கோத்தரி, யமுனோத்திரி ஆகிய முக்கிய நதிகள் தீர்த்தம் நேரடியாக எடுத்து வந்தது.
இமயமலை சென்று திரும்புகையில், ஹரிதுவார் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருத்த போது கங்கோத்தி, யமுனோத்திரி உட்பட நாட்டில் உள்ள அனைத்து புண்ணிய நதி தீர்த்தங்களும் கும்பாபிேஷகத்தில் சேர்க்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது மஞ்சள் உடை உடுத்தி தலை நிறைய மல்லிகை வைத்த ஒரு பெண் காலில் சலங்கை ஒலியுடன் என் அருகில் வந்து நின்று, நீங்கள் பேசிக் கொண்டு இருப்பதை நான் கேட்டுக்கொண்டு இருந்தேன். நாட்டில் உள்ள அனைத்து புண்ணிய நதிகள் தீர்த்தம் எடுத்து வர இருப்பதாக கூறிறீர்கள். முந்திரிநாத் சென்று கண்டக நதி தீர்த்தம் எடுத்தீர்களா ? என்று கேட்டார்கள். அதுவேறு நாடு என்றேன். அதற்கு அவர்கள், அதுவும் இந்து நாடு தானே ! என்றார். பதில் கூற முடியாது நின்றேன். அப்போது அவர்கள் இந்தா பிடி.... நான் இப்போது அங்கு இருந்து தான் வருகிறேன் என்று முக்திரிநாத்தில் உள்ள கண்டகநதி தீர்த்தம் தந்தார். எனக்கு, உடம்பெல்லாம் மெய் சிலிர்க்க கண்களில் நீர் பெறுக அந்த புனித தீர்த்தத்தை பெற்றுக்கொண்டு, கண்ணை மூடி அரசுகாலனி ஸ்ரீமகாபுற்றுக்கண் தாயே ! உன் கருணை ! உன் அருள் என்று நினைத்து கண்ணை திறந்த போது.... கண்டகநதி தீர்த்தம் கொடுத்த பெண் மறைந்து விட்டார். நானும் அந்த ரயில் நிலையத்தை சுற்றி சற்றி வந்து பார்த்தேன் காணவில்லை.
பிறகு ரயில் ஏறி சென்னை வந்து கொண்டு இருந்து போது இரவு படுத்து தூங்கியபோது கனவில் அம்மன் அந்த பெண் வடிவில் தோன்றி மகனே! நான்தான் உனக்கு கண்டகநதி தீர்த்தம் கொடுத்தேன். அதோடு உன் கூடவே தான் வந்து கொண்டு இருக்கின்றேன், கவலைப்படாதே! என்று கூறி மறைந்தது.
இமயமலையில் இருந்து நான்கு (4) ரிஷிமகாத்மாக்களும், திருப்பதி, திருவண்ணாமலை, பழனி போன்ற 40 முக்கிய ஸ்தலங்களில் இருந்து 40 சாது மகாத்மாக்களும், 6 பெண் சன்னியாஸ்திரிகளும், சதுரகிரி மலையில் இருந்து உடையே அணியாத சித்தர் ஒருவர் ஆக மொத்தம் 51 இறை அருளார்களும் இக்கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.
இக்கோவில்மூலஸ்தானத்தில் பிரதானமாக வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்தி, தனது வாகனமான சிம்மத்தில் அமராமல், ஒவ்வொரு மனிதனுக்கும் மோட்சத்தை கொடுக்கும் கேதுபகவான் (ஐந்து தலை நாகம்) மீது ஒய்யாரமாய், சாந்த ரூபியாக, சிரித்த நன் அழகு முகத்துடன் சாந்தமே திரு உருவாய் அமர்ந்து காட்சியளித்து அருள்பாளிக்கின்றாள்.
மானிடர் அனைவருக்கும் மோட்சத்தை கொடுக்கும் கேது பகவான் மீது அமர்ந்து அம்மன் அருள்பாளிப்பதால், இந்த ஸ்தலத்திற்கு வரும் உண்மையான பக்தர்களுக்கு மோட்சம் அளிக்கின்றாள்.
அன்னைக்கு பசும்பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறும் அதிசயம்.
இக்கோவிலில், முக்கண் முதல்வன் வலம்புரி கணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மதேவர், சக்தி, வைஷ்ணவி, பிரம்மகி, பெருமாள், துர்க்கை, பாலமுருகன் உள்ளிட்ட தெய்வங்கள் அன்னையை சுற்றி அமைந்துள்ளார்கள்.
உலகில் எந்த கோவிலிலும் அமையாவண்ணம், நம்மை இயக்கி – நமக்கும் நம்மை படைத்த தெய்வங்களுக்கும் பாலமாக இருக்கும் நவக்கிரக நாயகர்கள் சாஸ்திரப்படி ஓவவொருவருக்கும் எத்தனை தேவியர்களோ அதன்படி அத்தனை தேவியர்களுடனும் தமக்குரிய வாகனத்துடனும் உருவில் மிகப்பெரிய அளவிலும் அமைந்து அருள்பாளிப்பது.
இந்த நவகிரக நாயகர்கள் அதாவது, சூரியபகவான் தனது நான்கு தேவியர்களுடன் ஏழு குதிரை பூட்டிய ஒரு சக்கர தேரில் தனது சாரதியான அருணபகவானும்,
சந்திர பகவான் தனது 27 தேவிகளில் தனக்கு பிடித்த ரோகினி, கிருத்திகையுடனும், (புதன் பகவானை வளர்த்தவர்கள்)
செவ்வாய் பகவான் தனது இரண்டு தேவியர்களுடனும்,
புதன் பகவான் தனது இளை என்ற ஒரு தேவியருடனும்
குருபகவான் தனது இரண்டு தேவியர்களுடனும்
சுக்கிரபகவான் தனது மூன்று தேவியர்களுடனும்
சனீஸ்வர பகவான் தனது மூன்று தேவியர்களுடனும்
ராகு, கேது பகவான்கள் தனது தேவியர்களுடனும் அமைந்து அருள்பாளிப்பது.
நவகிரக நாயகர்களை நாம் வழிபடுவதற்கு முன், அவர்களின் (அதிதேவதை) தெய்வங்ககளை நாம் வழிபட்டு விட்டு பிறகு இவர்களை வழிபடுவது சிறந்த நன்மையளிக்கும். அதனால் அன்னையின்பேரருளால் நவகிரக நாயகர்கள் அனைவரின் தெய்வங்கள் (அதிதேவதை) இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள்பாளிப்பது.
இக்கோவிலில் கும்பாபிேஷத்தின் போது ராஜகோபுரத்தில் தீர்த்த அபிஷேகம் செய்யும் போது கருடன் மூன்று முறை வலம் வந்து பின் ராஜகோபுரத்திற்கு 90 டிகிரிக்கு நேராக வானத்தில் தனது இரண்டு சிறகுகளை விரித்த வண்ணம் அசையாமல் அப்படியே சில நிமிடங்கள் நின்றது. இதைப்பார்த்த இமயமலை ரிஷிமகாத்மாக்கள், என்னிடத்தில் (நிறுவனர் காலனி சேகர் சுவாமி) இறைவன் அல்லது இறைவி நேரடியாக தோன்றிய ஸ்தலத்திற்கு மட்டுமே கருடன் இந்த மாதிரி காட்சியளிக்கும் என்றார்கள். நான் அப்போது சித்தர்களுக்கு அம்மன் நேரடியாக தோன்றி ஸ்தலத்திற்கு மட்டுமே கருடன் இந்த மாதிரி காட்சியளித்தலை கூறினேன். நுற்றுக்கு நுறு உண்மை! இல்லையென்றால் கருடன் இப்படி காட்சியளிக்கமாட்டார் என்றார்கள்.