சிறப்பு அம்சங்கள்

நம் நாட்டில் வேறு எந்த ஸ்தலதிலும் நடைபெறாத அபிஷேக, அலங்கார, நிவேதனங்கள்.

1)  அன்னைக்கு பசும்பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறும் அதிசயம்.

2)  தினசரி காலை தயிர் அன்னமும், மதியம் பொங்களும், இரவு மட்டும் விதவிதமாக அதாவது.

. i)        ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவான் அதிபதி ஆவார் . இவர் கோதுமைக்கு அதிபதியாதலால், இவருக்கு பிடித்தமான காரமான சுவையில் கோதுமை உப்புமாவும்.
ii)        திங்கட்கிழமை அன்று சந்திர பகவான் அதிபதி ஆவார் . இவர் நெல்லுக்கு அதிபதியாதலால், இவருக்கு பிடித்தமான இனிபான சுவையில் சக்கரை பொங்கலும்.
iii)        செவ்வாய்கிழமை அன்று செவ்வாய் பகவான் அதிபதி ஆவார் . இவர் துவரைக்கு அதிபதியாதலால், இவருக்கு பிடித்தமான துவர்ப்பு சுவையில் முழு துவரை அவியல். .
iv)        புதன்கிழமை அன்று புதன் பகவான் அதிபதி ஆவார் . இவர் பாசிபயிறுக்கு அதிபதியாதலால், இவருக்கு பிடித்தமான உவர்ப்பு சுவையில் பாசிபயிறு அவியல். .
v)        வியாழகிழமை அன்று குரு பகவான் அதிபதி ஆவார் . இவர் சுண்டல் கடலைக்கு அதிபதியாதலால், இவருக்கு பிடித்தமான இனிபான சுவையில் தேங்காய் திருகலுடன் சுண்டல் கடலை அவியல்.
vi)        வெள்ளிகிழமை அன்று சுக்கிர பகவான் அதிபதி ஆவார் . இவர் வெண்மொச்சைக்கு அதிபதியாதலால், இவருக்கு பிடித்தமான இனிபான சுவையில் தேங்காய் திருகலுடன் வெண்மொச்சை அவியல்.
. vii)         சனிகிழமை அன்று சனீஸ்வர பகவான் அதிபதி ஆவார் . இவர் எள்ளுக்கு அதிபதியாதலால், இவருக்கு பிடித்தமான கசப்பான சுவையில் எள்ளு சாதமும், ஏழு நாட்களுக்கு ஏழு நாயகர்களுக்கு பிடித்தமானவை செய்வோம், ஆனால் ராகு பகவானும், கேது பகவானும் விடுபட்டு விடும் என்பதால், சனிக்கிழமை அன்றே, சனீஸ்வரபகவானுக்கு பிடித்த கசப்பான சுவையில் எள்ளு சாதமும்,ராகு பகவான் உளுந்துக்கு அதிபதி ஆவார், இவருக்கு பிடித்தமான புளிப்பு சுவையில் உளுந்து சாதமும், கேது பகவான் கொள்ளுக்கு அதிபதி ஆவார், இவருக்கு பிடித்தமான புளிப்பு சுவையில் கொள்ளு சாதமும், ஆக சனிக்கிழமை மட்டும் மேற்படி மூன்று விதமானவை. இப்படி வாரா வாரம் இந்த ஸ்தலத்தில் விதவிதமான நிவேதனங்கள் செய்யப்பட்டு அம்மன் உட்பட அணைத்து தெய்வகளுக்கும், நவநாயகர்களுக்கும் படைத்து போது மக்களுக்கு பிரசாதாமாக வழங்கி வருகின்றோம்.(இப்படிப்பட்ட பிரசாதங்கள் வேறு எந்த ஸ்தலத்திலும் செய்வது இல்லை).

3)  நவகிரக நாயகியாகிய நமது அம்மனுக்கு ஞாயிறு அன்று சூரியபகவானுக்கு பிடித்த நிறமான கரும்சிவப்பு உடையிலும், திங்கள் அன்று சந்திர பகவானுக்கு பிடித்த நிறமான வெள்ளை கலந்த உடையிலும், செவ்வாய் அன்று செவ்வாய் பகவானுக்கு பிடித்த சிவப்பு உடையிலும், புதன் அன்று புதன் பகவானுக்கு பிடித்த பச்சை உடையிலும், வியாழன் அன்று குரு பகவானுக்கு பிடித்த மஞ்சள் உடையிலும், வெள்ளி அன்று சுக்கிர பகவானுக்கு பிடித்த வெள்ளை கலந்த உடையிலும், சனி அன்று சனீஸ்வரன் பகவானுக்கு பிடித்த புளு உடையிலும் அம்மன் காட்சியளித்து அருள்பாளிகிறார்.

வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லாத வழிபாடு முறைகள்

1)  நவகிரக நாயகர்களுக்கு தான்ய விளக்குகள் வைத்து வழிபடுவது எப்படி என்றால், சூரிய பகவானுக்கு கோதுமை விளக்கு வைத்து பக்தர்களால் ஏற்றச்சொல்லி, ஓம் ஹிரீம் ஸ்ரீ சிவசூரியப்பெருமாளே ! உமையாள் நான்கு தேவித்தாய்களே போற்றி ! போற்றி ! தங்களுக்கு பிடித்தமான கோதுமை விளக்கினை ஏற்றியுள்ளோம் ஏற்றுக்கொண்டு நல்லாசிகள் வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம் . ஓம் ஹிரீம் ஸ்ரீ சிவசூரியப்பெருமாளே ! உமையாள் நான்கு தேவித்தாய்களே போற்றி ! போற்றி ! இப்படி பக்தர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்கள் வாயால் சொல்லச்சொல்லி வழிபட வைப்போம்.
இது போன்று சந்திர பகவானுக்கு நெல் விளக்கும், செவ்வாய் பகவானுக்கு துவரை விளக்கும், புதன் பகவானுக்கு பாசிபயிறு விளக்கும், குரு பகவானுக்கு சுண்டல் கடலை விளக்கும், சுக்கிர பகவானுக்கு வெண்மொச்சை விளக்கும், சனீஸ்வர பகவானுக்கு எள்ளு விளக்கும், ராகு பகவானுக்கு உளுந்து விளக்கும், கேது பகவானுக்கு கொள்ளு விளக்கும் வைத்து வழிபடுவதற்கு முன் இவர்களின் தெய்வகளுக்கு (அதிதேவதைகள்) நெய் விளக்கு ஏற்றி பின்பு இவர்களுக்கு உரிய தான்ய விளக்கு வைத்து அவாவர்களுக்கு உரிய மந்திரங்ககளை பக்தர்களுக்கு சொல்லி கொடுத்து அவர்கள் திருவாயாள் சொல்லச்சொல்லி வழிபட வைத்து அதன் பலனை அவர்கள் பெற வைத்து அனுப்புகிறோம்.

2)   ஒவ்வொருக்கும், நேரடி மற்றும் அவதாரம் சம்பந்தமான படத்தை பார்த்தால் எந்த தெய்வம் என்று நமக்கு தெரியும் ஆனால் நாம் ஜனனமான நட்சத்திரம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இந்த ஸ்தலத்தில் 27 நட்சதிரங்களும் எப்படி இருக்கும் என்றும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் எந்த நிறத்தில் எந்த உடை அணிந்து எந்ததெந்த தெய்வங்களை எப்படி வழிபட வேண்டும், எப்படி மந்திரம் உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கின்றோம்

3)  இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினசரி ஒருமுறை, வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை, வருடம் ஒருமுறை எப்படி ஜாதக ரீதியாக இறையை முறையாக வழிபட வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறோம்.

4) பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் எப்படி வழிபட வேண்டும் என்று இங்கு வரும் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கிறோம்.

5)  இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஜாதகரீதியாக எந்த வாயில்லா ஜீவனுக்கும், பறவைக்கு உணவு வழங்க வேண்டுமென்றும், எந்த மலர்கள் கொண்டு எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்றும், எந்த விதமான மரங்களை வளர்க்க வேண்டும் அல்லது மரங்கள் வளர தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறோம்.

6)   மேற்படி எல்லாம் முறையாக வழிபாடு செய்வதற்கு முன் நமது தகுதி எது ? அந்த தகுதியை எப்படி வளர்த்துக்கொள்ளவேண்டும் ? என்னை தரிசிக்க வந்த மக்களுக்கு முறையான வழிபாட்டை சொல்லிக்கொடு என்று எனக்கு அன்னை அருளியதை இக்கோவிலுக்கு வருபவர்களுக்கு சொல்லிக்கொடுக்கின்றோம்.

7)   மேற்படி இக்கோவிலில் புற்றுக்கு பசுபால் (பாக்கெட் தவிர்க்கவும்) மற்றும் 13 நெய் விளக்கு. ஒன்பது தானிய விளக்கு வைத்து ஒரு மண்டலம் அதாவது 48 வாரம் தொடர்ந்து. வழிபட்டவர்களுக்கு திருமணத்தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய பாக்கியம், முடங்கிய தொழில் வளம்,தீராத கணவன், மனைவி பிரச்சனைகள் தீர்ந்து ஓன்று சேர்தல், தீராத பல நோய்கள் , அரசு பணிகள், இப்படி தீராத பல பிரச்சனைகள் தீர்த்து வைத்து, கலியுக ஆன்மாவை புனிதமாக்கி அடுத்து யுகத்திற்கு செல்ல வழிகாட்டுபபவள்தான் நமது அரசுகாலனி ஸ்ரீ மஹா புற்றுக்கண் மாரியம்மன் தாய்!